ஈரானின் மற்றுமொரு பெரிய புள்ளிக்கு ஆபத்து - ட்ரம்பின் கோரமுகம்
ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் 11வது நாளை எட்டி இருக்கிறது. ஈரானின் புதிய தலைவரை தனது ஒப்புதல் இல்லாமல் நியமிக்கக் கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து இருந்தார்.
அத்தோடு 48 மணி நேரத்தில் தான் புதிய தலைவரை அறிவிக்கப் போவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதற்குள் ஈரான் தங்களது புதிய தலைவரை அறிவித்து இருக்கிறது.
இந்த நியமனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் அங்கீகாரம் இல்லாமல் அவர் நீண்ட காலம் பதவியில் இருக்க முடியாது என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேலும் புதிய தலைவரைக் குறிவைப்பதாக எச்சரித்துள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...