நெடுந்தீவில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Indian fishermen Sri Lanka Sri Lanka Navy
By Rakesh Nov 15, 2023 02:42 PM GMT
Report

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டடிருந்த 22 தமிழக கடற்தொழிலாளர்களில் ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை 21 கடற்தொழிலாளர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை ஐந்து வருட காலங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 22 கடற்தொழிலாளர்களுக்கு எதிரான வழக்கு இன்றையதினம் (15.11.2023) நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது , 22 கடற்தொழிலாளர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

கொழும்பு பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பெரும் சோகம்! மாணவி மரணம் : அறுவர் வைத்தியசாலையில்(Video)

கொழும்பு பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பெரும் சோகம்! மாணவி மரணம் : அறுவர் வைத்தியசாலையில்(Video)


அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் 22 கடற்தொழிலாளர்கள் மீதான 3 குற்றச்சாட்டுக்களுக்கு தலா 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அதனை ஐந்து வருடங்களுக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

அவர்களில் ஒரு கடற்தொழிலாளர் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாத பகுதியில் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு , அதனை ஐந்து வருடங்களுக்கு மன்று ஒத்திவைத்து இருந்தது.

நெடுந்தீவில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Judgement For 22 Indian Fisherman

சட்டத்தரணியின் விண்ணப்பம்

இந்நிலையில் குறித்த கடற்தொழிலாளர் மீள கைது செய்யப்பட்டமையால் அவருக்கான முற்குற்றத்திற்கான 18 மாத சிறைத்தண்டனையுடன் தற்போது விதிக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையையும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இலங்கை கிரிக்கெட் மீதான விசாரணை: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் மீதான விசாரணை: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு


அதனை அடுத்து அவரது சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தண்டனை காலத்தை ஏக காலத்தில் (அதாவது இரு தண்டனையையும் ஒரே கால பகுதியில் என்றால் 18 மாதம்) அனுபவிக்க மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இரு குற்றங்களும் வெவ்வேறு கால பகுதியில் நடைபெற்றமையால் ஏக காலத்தில் அனுபவிக்க மன்று அனுமதிக்காது என்றும் , தற்போதைய மூன்று குற்றங்களுக்கான தலா 06 மாத தண்டனையை ஏக காலத்தில் (06 மாதத்தில்) அனுபவிக்க மன்று உத்தரவிட்டது.

அதனால் கடற்தொழிலாருக்கு முற்குற்றமான 18 மாத சிறை தண்டனையுடன் , தற்போது புரிந்த குற்றத்திற்கான 06 மாத சிறை தண்டனையையும் சேர்த்து 24 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் சீரற்ற காலநிலை: 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல பகுதிகளில் சீரற்ற காலநிலை: 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை


அதேவேளை ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை என்பது சிறைத்தண்டனை ஒத்தவைக்கப்பட்ட கால பகுதிக்குள் மீள குற்றம் செய்யாது இருக்க வேண்டும். அந்த காலப்பகுதிக்குள் மீள குற்றம் புரிந்து குற்றவாளியாக மன்று கண்டால் , ஏற்கனவே விதிக்கப்பட்ட சிறை தண்டனையுடன் , தற்போதைய குற்றத்திற்கான தண்டனையையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - தீபன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US