மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள தலையிடி: கடும் அழுத்தம் கொடுக்கும் சகாக்கள்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தால், தமது உறுப்பினர்களாலும், ஒட்டுமொத்த மக்களாலும் நிராகரிக்கப்படுவதாக பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமைக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்சி மாநாடு மற்றும் வரவு செலவு திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் யோசனைகளே இவ்வருட வரவு செலவுத் திட்டத்திலும் சமர்ப்பிக்கப்படும் போது பல சிக்கல் நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கட்சிக்குள் குழப்பம்
எனவே, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு முன்னர் இருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்சவைச் சுற்றியிருக்கும் இளம் உறுப்பினர்கள் குழுவும் பரிந்துரைத்துள்ளது.
எப்படியிருப்பினும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு கட்சித் தலைமையிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.