இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஹமாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு(Video)
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில்இ பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்தே வருகிறது. முதலில் இந்த போரில் ஹமாஸ் கை ஓங்கி இருப்பது போலத் தெரிந்தாலும் கூட சீக்கிரமே இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.
காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. காசாவின் முக்கிய தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில்இ காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் - ஷிஃபா மருத்துவமனையைச் சுற்றி இப்போது தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
மோதலுக்கு முன்னரே பல ஆயிரம் பேர் மருத்துவமனையை விட்டு வெளியேறினர். இருப்பினும்இ இன்னுமே கூட பல நூறு நோயாளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மருத்துவமனையில் உள்ளே சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் அமெரிக்க அசிரக் ஜோ பைடனும் மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை விமர்சித்துள்ளார். காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று பைடன் வலியுறுத்தினார்.
மேலும் இது தொடர்பில் தெளிவு படுத்துகின்றது “நிஜக்கண்” நிகழ்ச்சி,