சிரியாவின் எண்ணெய் தேவையை ஈடுகட்டும் மொஸ்கோ!
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையிலும், அந்நாடு தனது எரிசக்தித் தேவைகளுக்காக இன்னும் ரஷ்யாவின் எண்ணெயையே பெரிதும் நம்பியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்திற்கு ரஷ்யா இராணுவ ரீதியாக ஆதரவு அளித்ததால் அந்நாட்டு மக்களிடையே மாஸ்கோ மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
இருப்பினும், பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி குறைவாக உள்ளதால், சிரியா தனது இறக்குமதியில் ரஷ்யாவையே முதன்மைப் பங்காளியாகக் கொண்டுள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி
இந்த ஆண்டு சிரியாவிற்கான ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி 75 சதவீதம் அதிகரித்து, நாள் ஒன்றுக்கு 60,000 பெரல்களாக உயர்ந்துள்ளது.
சிரியாவின் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 35,000 பெரல்களாக மட்டுமே உள்ள நிலையில், அந்நாட்டின் ஒட்டுமொத்தத் தேவை 1,20,000 முதல் 1,50,000 பெரல்கள் வரை உள்ளது.

இந்த இடைவெளியை நிரப்ப ரஷ்யாவிலிருந்து வரும் எண்ணெய் கப்பல்கள் பெரும் பங்காற்றுகின்றன.
சிரியாவின் தற்போதைய அரசு வொஷிங்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சுமுக உறவை விரும்பினாலும், உலகளாவிய நிதி அமைப்புகளுடன் இன்னும் முழுமையாக இணையாததால், ரஷ்யா போன்ற நாடுகளின் விநியோகச் சங்கிலியையே சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பேச்சுவார்த்தை
குறிப்பாக, சர்வதேசத் தடைகளைத் தவிர்ப்பதற்காகக் கடலில் வைத்து ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெயை மாற்றும் (Ship-to-ship transfer) உத்திகளை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.
ரஷ்யாவுடனான இந்த வர்த்தக உறவு சிரியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிரியா மீதான தடைகளை கடந்த ஆண்டு நீக்கியிருந்தாலும், ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகம் மீண்டும் தடைகளுக்கு வழிவகுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில், சிரிய அரசு தனது எண்ணெய் விநியோகத்தைப் பன்முகப்படுத்த துருக்கி போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் இந்த எண்ணெய் அரசியல், சிரியாவில் மாஸ்கோ இன்னும் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri