ஜனாதிபதிக்கு மே தினத்தில் பகிரங்கமாக சவால் விடுத்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித்

Colombo Anura Kumara Dissanayaka Sajith Premadasa May Day Janatha Vimukthi Peramuna
By Rakesh May 02, 2026 08:31 AM GMT
Report

முடியுமானால் மாகாண சபைத் தேர்தலை நடத்தும்படி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாம் சவால் விடுக்கின்றோம். இது வெறுமனே அறிக்கையல்ல, இதனை நாம் ஜனாதிபதியிடம் சவாலாக முன்வைக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவ்வாறு மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் அடுத்த வருடம் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் முதலமைச்சர்களுடன் நாம் நடத்துவோம் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் நேற்று(01.05.2026)பிற்பகல் கொழும்பு பீ.டி.சிரிசேன விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆளும் கட்சியின் மோசடிகள்

மேலும், திறைசேரி, மின்சாரம், கல்வி, துறைமுகம் என்பன வெறும் அரச நிறுவனங்களோ அல்லது வெறும் அமைச்சுக்களோ அல்ல, மாறாக திறைசேரி என்பது நாட்டின் பொருளாதாரத்தின் இதயமாகும். இந்நிறுவனங்களை மக்கள் விடுதலை முன்னணி அரசு பாதுகாப்பற்றதாக்கி, சீரழித்து வருகின்றது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.  

ஜனாதிபதிக்கு மே தினத்தில் பகிரங்கமாக சவால் விடுத்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் | Samagi Jana Balawegaya May Day Event Criticism  

கல்வியில் உலகப் போக்கு எங்கோ சென்று கொண்டிருக்க, இந்த அரச தரப்பினர் கல்வியில் ஆபாச காணொளிகளைச் சேர்த்து கல்வியை அழித்தனர். இன்று வரை இதற்கான பொறுப்பை இந்த அரசில் இருக்கும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.இவர்கள் துறைமுகத்திலிருந்து கொள்கலன்களை விடுவித்து பாதுகாப்பை இல்லாமல் செய்தனர்.

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து பெரும் மோசடிகளைச் செய்தனர். இதற்கும் இதுவரையில் யாரும் பொறுப்பேற்க முன்வராமல் இருக்கின்றனர்.

நமது நாட்டின் 25 இலட்சம் டொலர்கள் காணாமல்போனது மாத்திரமல்லாது அந்த விடயத்தை மறைத்து வைத்துக் கொண்டு வந்தனர். இவை எதற்கும் பொறுப்பேற்க இந்த அரசில் யாரும் இல்லை.இந்த அரசு இயலுமையற்ற அரசு என்பதை தனியாக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

திருடர்களை நாம் பிடிப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய திசைகாட்டி அரசு, புதிய திருடர்களை உருவாக்கி, புதிய திருடர்களைச் சிருஷ்டித்து வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி இல்லாதிருந்தால் இன்றும் பாடப்புத்தகங்களில் ஆபாச விடயங்கள் அவ்வாறே இருந்திருக்கும்.

ஜனாதிபதிக்கு மே தினத்தில் பகிரங்கமாக சவால் விடுத்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் | Samagi Jana Balawegaya May Day Event Criticism

தரமற்ற நிலக்கரி இறக்குமதி

துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் கள்ளத்தனமாக விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை மின்சக்தி அமைச்சர் அந்தப் பதவியில் இருந்தபடியே தரமற்ற நிலக்கரிகளை இறக்குமதி செய்து கொண்டே இருப்பார்.

இன்றும் திறைசேரியில் இருந்து பில்லியன் கணக்கில் திருடப்பட்டுக்கொண்டே இருக்கும்.இந்த விடயங்களை ஐக்கிய மக்கள் சக்தியினரான நாமே நாட்டுக்கு வெளிக்கொணர்ந்தோம். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம்.

நாட்டை அழிக்க ஒரு கொள்ளையர் வட்டம் உருவாகியுள்ளது என்று ஜனாதிபதி சமீபத்தில் கூறினார்.இவை அனைத்தையும் விட பெலவத்த உருட்டு வட்டம் மிகவும் ஆபத்தானது. அந்த வட்டம் தற்சமயம் புதிய திருடர்களை உருவாக்கி, அவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் தேவையற்ற வேலைகள் செய்யாத அரசுக்கு பதிலாக நாட்டை முன்னேற்றும் ஆட்சிக்கு அடித்தளம் இடுவோம்.

புதிய நடிப்புகளும், அலங்காரங்களும், மேக்கப் அரசியலும், அழகான வார்த்தைகளும், சமூக ஊடகங்கள் மூலம் உருவாக்கப்படும் புதிய நாடகங்களும் நாட்டுக்குத் தேவையில்லை. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளே தேவையாக காணப்படுகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி புதிய செயற்றிட்டங்கள்

அந்தத் தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார். நாட்டின் மக்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், தொழில்வல்லுநர்கள் உட்பட அனைவரும் அநாதரவான நிலைக்கு ஆளாகி காணப்படுகின்றனர்.

நாட்டின் தொழில் வல்லுநர்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் இல்லாத நிலை நீடிக்கின்றன.

ஜனாதிபதிக்கு மே தினத்தில் பகிரங்கமாக சவால் விடுத்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் | Samagi Jana Balawegaya May Day Event Criticism

மறுபுறம் "டித்வா" சூறாவளியில் கூரையை இழந்தவர்கள் 10 இலட்சம் கிடைக்கும் வரையிலும், காணிகளையும் வீடிகளையும் இழந்தோர் ஒரு கோடி கிடைக்கும் வரையிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த அரசு இந்த நிவாரணங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு செயற்பட்டு வருகின்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் நல்ல நிலைக்கு திரும்பவில்லை. இவர்களை அரசு கைவிட்டு விட்டது.வழக்கமான கட்டமைப்பில் சுருங்கிக் கொண்ட 76 ஆண்டு அரசியலுக்குப் பதிலாக, தீர்வுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்தோம்."பிரபஞ்சம்" மற்றும் "மூச்சு” திட்டங்களை தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம்.

எதிர்காலத்தில் பாடசாலை மட்டத்தில் செயற்கை நுண்ணறிவுக் கல்வியைப் போதிக்கும் வேலைத்திட்டத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி கிட்டிய எதிர்காலத்தில் ஆரம்பிக்கும்.

ஜனாதிபதிக்கு மே தினத்தில் பகிரங்கமாக சவால் விடுத்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் | Samagi Jana Balawegaya May Day Event Criticism

அரசின் ஒப்பந்தக்காரர்களுக்கு ஏற்ப ஐக்கிய மக்கள் சக்தி அல்லது எதிர்க்கட்சி பலவீனமாகக் காணப்படுவதாகக் கூறிக்கொண்டிருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் ஏனைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த தரப்புகளுடன் இணைந்து போலிச் சான்றிதழ் வைத்திருந்த சபாநாயகரையும், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்த அமைச்சரையும், அமைச்சின் செயலாளரையும் நாம் வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்.

பல்வேறு குழுக்கள், அரசினதும் ஆளும் தரப்பினரோடும் ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டு, எதிர்க்கட்சி மீது பல விதமான கதைகளை அவிழ்த்து விட்டாலும், அவற்றைக் கண்டு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் சளைத்து விடாது.

நாட்டைக் கட்டியெழுப்பும் ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகவே காணப்படுகின்றது. மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியால் சீரழிந்து கொண்டிருக்கும் நமது நாட்டை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்போம்.

ஜனாதிபதிக்கு மே தினத்தில் பகிரங்கமாக சவால் விடுத்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் | Samagi Jana Balawegaya May Day Event Criticism

ரணில் விக்ரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் இணைந்து வேலை செய்ய குழு ஒன்று அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

உழைக்கும் மக்களின் உரிமை

நான் கூறுகின்றேன், இரு தரப்பினர்களினதும் இணைவை விரும்பாத அதற்கு இடமளிக்காது நூல் சூத்திரம் போடுபவர்களும் காணப்படுகின்றனர். ஆகையினால் அவ்வாறான எந்த குழுக்களும் தேவையில்லை. இணைந்து வேலை செய்ய இரு தரப்புமே தயார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடும் இந்தத் தருணத்தில் ஒரு கட்சியாக, ஒரு அரசியல் இயக்கமாக, உழைக்கும் மக்களின் உரிமைகளை கட்டாயம் பாதுகாப்போம் என்று உறுதியளிக்கின்றோம்.

கிராமப்புற, நகர்ப்புற, தோட்ட மற்றும் பிற சமூகங்கள் எவையாயினும், அரச மற்றும் தனியார் துறையில் உழைக்கும் மக்கள் என சகலரினதும் உரிமைகளை நாம் பாதுகாப்போம் என்று உறுதியளிக்கின்றேன்.

உழைக்கும் மக்களின் குறைக்கப்பட்ட, வெட்டப்பட்ட சகல சலுகைகள் மற்றும் உரிமைகளுக்காக வேண்டி ஐக்கிய மக்கள் சக்தி கட்டாயம் போராடும்.

ஜனாதிபதிக்கு மே தினத்தில் பகிரங்கமாக சவால் விடுத்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் | Samagi Jana Balawegaya May Day Event Criticism

ஐக்கிய மக்கள் சக்தி நடுத்தர பாதையையே பின்பற்றுகின்றது. நடுத்தர பாதையே எமது வழியாகும். தீவிர வலதுசாரி, நவ லிபரல்வாதத்தை நாம் நிராகரிக்கின்றோம்.

அவ்வாறே தீவிர இடதுசாரி, தீவிர சோசலிச கொள்கையையும் நாம் நிராகரிக்கின்றோம். சமூக ஜனநாயகம் மற்றும் சமூக சந்தைப் பொருளாதாரத்தை மையமாக கொண்டு மக்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டும் கொள்கையை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இந்தக் கொள்கையில் நாம் உறுதியாக நின்று இதன் வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

60 மில்லியன் இலஞ்ச ஊழல் விசாரணை: மகிந்த ராஜபக்‌சவுக்கு அழைப்பு என தகவல்!

60 மில்லியன் இலஞ்ச ஊழல் விசாரணை: மகிந்த ராஜபக்‌சவுக்கு அழைப்பு என தகவல்!

தொழிற்சங்க பிரச்சினைகளை புறந்தள்ளும் அரசாங்கம்: நாமல் முன்வைக்கும் பாரிய குற்றச்சாட்டு

தொழிற்சங்க பிரச்சினைகளை புறந்தள்ளும் அரசாங்கம்: நாமல் முன்வைக்கும் பாரிய குற்றச்சாட்டு


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US