மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் அதிர்ச்சி
மொராக்கோ நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 23:11 மணியளவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய துக்க தினம் அறிவிப்பு
இந்த நிலநடுக்கத்தால் மேலும், 1400 பேர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
அதிகாரிகள் மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்த நிலையில், செஞ்சிலுவை இயக்கியத்தினர் இந்த சேதத்தை சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களுக்கு இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.