சூடான் வான்வழித் தாக்குதல்களில் 300இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
சூடானில் அரசுப் படைகள் நடத்தியதாகக் கூறப்படும் தொடர் ட்ரோன் தாக்குதல்களில், இறுதி ஊர்வலத்திற்குச் சென்றவர்கள் மற்றும் எரிபொருள் சந்தையில் இருந்தவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதல்களில், இறுதி ஊர்வலக் வாகனம் மற்றும் மக்கள் கூடிிருந்த கூடாரம் குறிவைக்கப்பட்டதில் மாத்திரம் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.
எரிபொருள் விநியோக தளம்
இதனையடுத்து சூடானுக்கும் தெற்கு சூடானுக்கும் இடைப்பட்ட சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியான அபிவேயில் உள்ள சந்தை மீது திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 153 பேர் கொல்லப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஃப் (RSF) துணை இராணுவப் படையினரின் எரிபொருள் விநியோக தளமாக இருந்ததாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு இடையேயான உறவு விபரிக்க முடியாத அளவுக்குப் பதற்றமடைந்துள்ளது. அத்துடன், தெற்கு சூடான், சூடானியத் தூதரை அழைத்து கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan