அநுரவுக்கு சூனியம் வைக்கும் பிக்குகள்
சமகால அநுர அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அது நாசகார சக்திகளுக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.
இதன் காரணமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக ஒரு தருப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர்களில் ஒரு தரப்பினர் பௌத்த பிக்குகள் தலைமையில் ஒன்றுகூடிய சில தினங்களாக தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாந்தீரிக பூஜைகள்
குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை உடன் விடுவிக்க வேண்டும் என கோரிக்கையின் அடிப்படையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

பௌத்த பிக்குகள் என்றால் ஜனாதிபதி அநுர ஓடி வந்து காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் பெற்று ஞானசார தேரரின் விடுதலை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என அவர்கள் எதிர்பார்த்தனர்.
எனினும் சட்டத்தின் முன் அனைவரும் ஒன்று தான், சட்டத்திற்கு எதிராக செயற்பட முடியாது என ஜனாதிபதி உறுதியாக அறிவித்துள்ளார்.
அநுரவுக்கு சூனியம்
இந்நிலையில் ஜனாதிபதியை தம்வசப்படும் நடவடிக்கையில் பௌத்த பிக்குகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதற்காக நேற்று முன்தினம் இரவு அநுரவுக்கு சூனியம் வைத்து, அவரின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்காக மாந்தீரிக அடிப்படையிலான பூஜைகள் செய்யப்படுவதுடன், ஜனாதிபதி போன்ற பொம்மை ஒன்றை உருவாக்கி அதற்குள் தூய சக்திகளை ஏவும் பணியினை பிக்குகள் முன்னெடுத்து வருகின்றனர்.
பிரபல அரசியல்வாதியொருவரை கொலை செய்ய இரகசிய பணிப்புரை வழங்கிய மகிந்த - வெளிப்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்
YOU MAY LIKE THIS VIDEO
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan