மகிந்தவின் உயிரைப் பறிக்கும் பாரிய சதித் திட்டம்! நீதிமன்ற சாட்சியத்தை அம்பலப்படுத்தும் சரத் வீரசேகர
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கான விடுதலைப் புலிகள் அமைப்பின் சதித்திட்டத்தில், பிரகீத் எக்னெலிகொடவுக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து, பிரகீத் எக்னெலிகொட இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக, புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவரே சாட்சியமளித்துள்ளதாகவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்தவின் உயிரைப் பறிக்கும் சதித் திட்டம்
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம்(20.10.2026) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சமீபத்தில் நீதிமன்றத்தில் வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், பிரகீத் எக்னெலிகொட தன்னுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டியதாக கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில், எக்னெலிகொட பிரிவினைவாதிகளுடன் தொடர்புபட்டிருந்தவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, சந்துன் ஜயசேகர என்ற பத்திரிகை ஆசிரியர் ஒருவர், தனது 30 ஆண்டுகால ஊடகப் பணிக்காலத்தில் பிரகீத் எக்னெலிகொட எழுதிய ஒரு செய்தியையோ அல்லது கட்டுரையையோ தான் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
அப்படியென்றால், பிரகீத் எக்னெலிகொட எவ்வாறு ஊடகவியலாளராகக் கருதப்படுகின்றார் என்பது எனக்குத் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல அரசியல்வாதியொருவரை கொலை செய்ய இரகசிய பணிப்புரை வழங்கிய மகிந்த - வெளிப்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்