டக்ளஸின் அலுவலகம் மற்றும் வீடு சுற்றிவளைக்கப்பட்டது ஏன்....! பொலிஸார் வெளியிட்ட தகவல்
யாழ்ப்பாணத்தில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்கள் அதிகாரிகளால் சோதனை நடத்தியமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சருடன் தொடர்புடையதாக கூறப்படும், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
2001 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தினால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளுள் இருந்த கைத்துப்பாக்கி ஒன்று, 2019 ஆம் ஆண்டில் வலிவேரிய பகுதியில் உள்ள கால்வாயிற்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளியான மாகந்துரே மதூஷ் வழங்கிய தகவலுக்கு அமையவே இத்துப்பாக்கியைக் கண்டெடுக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆட்சியின் போது ராஜபக்சர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட மாகந்துரே மதூஷ், கொலைகள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என வரலாறு நிரூபித்து வருவதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக செம்மணி புதைகுழி உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் டகள்ஸ் தேவானந்தாவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில், அதனை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this video