முச்சக்கரவண்டி சாரதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்(Photo)
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் பயணிகளிடம் இருந்து அறவீடு செய்யும் பிரயாணத்துக்கான தொகை நியாயமானதாக வரையறுக்கப்பட வேண்டும் என ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார்.
தற்கால எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பில் ஓட்டமாவடி பேரூந்து தரிப்பு நிலைய கட்டடத்தில் நேற்று(04) இரவு விசேட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிப்பதாவது, ''முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தற்போது எதிர்நோக்கும் எரிபொருள் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
தீர்மானங்கள்
முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு பெயர் பலகையிடல், குறிப்பிட்ட காலத்திற்கு புதிய தரிப்பிட அனுமதி வழங்குவதில்லை மற்றும் சங்கத்தின் கீழ் செயற்படும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் பயணிகளிடம் இருந்து அறவீடு செய்யும் பிரயாணத்துக்கான தொகை நியாயமானதாக வரையறுக்கப்பட வேண்டும்.
தற்போது முச்சக்கரவண்டிகளுக்கு கியூ.ஆர் குறியீட்டு அட்டை முறைப்படி ஐந்து லீட்டர் பெட்ரோல் வழங்கப்படுகின்றது.
[FG83FG ]
தொழில் நிமித்தம் ஈடுபடுத்தப்படும் முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் போதுமானதாக இல்லை இவைகள் குறைந்த பட்சம் வாரத்திற்கு 10 லீட்டராக அதிகரிக்கப்பட வேண்டும் என சாரதிகள் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தனியார் பேருந்து சேவைகள்
இதற்கு அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோரிடம் சிபார்சு பெற்று இதற்கான அனுமதியை பெற்றுத் தருவதாக சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.
மேலும் ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளூர் சேவைக்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பேருந்து சேவையை பாடசாலை சேவைக்கு மாத்திரம் பயன்படுத்துவது தொடர்பாகவும் அதனை இடைநிறுத்துவதா என்பது தொடர்பிலும் பேரூந்து உரிமையாளர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும்.”என கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் ஓட்டமாவடி முச்சக்கரவண்டிகள் சாரதிகள், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகள் நடைபெறுவது தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு |