நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகும் தனியார் பேருந்துகள்
QR முறையின் கீழ் வழங்கப்படும் டீசல் போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால, இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தனியார் பேருந்துகள் சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில பேருந்து சங்கங்கள் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்ஜன பிரியன்ஜின் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு வழங்கும் டீசல் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்லவும் போதாது
QR முறையின் மூலம் வாரத்திற்கு ஒரு பேருந்துக்கு 40 லீட்டர் டீசல் மாத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 40 லீட்டர் டீசலை பயன்படுத்தி தூர இடங்களுக்கு பயணிக்கும் பேருந்துகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கூட செல்ல முடியாது.
குறுகிய தூரம் பயணிக்கும் பேருந்து ஒரு மணி நேரத்திற்கு இந்த எரிபொருள் போதுமானதாக இருக்கும். தென் மாகாணத்தை சேர்ந்த சகல தனியார் பேருந்து உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.
இதனால், இன்று நள்ளிரவு முதல் சேவைகளில் இருந்து விலக சில பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன எனவும் அன்ஜன பிரியன்ஜின் கூறியுள்ளார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
