நாளுக்கு நாள் தீவிரமடையும் களநிலவரம்! கிடைக்கவுள்ள 400 மில்லியன் எண்ணெய் பீப்பாய்கள்
போரினால் ஏற்படும் இடையூறுகளை நிவர்த்தி செய்வதற்காக, சர்வதேச எரிசக்தி நிறுவனம், தங்கள் அவசரகால இருப்புக்களில் இருந்து 400 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை சந்தைக்குக் கிடைக்கச் செய்வதாக அறிவித்துள்ளது.
IEA-வின் 32 உறுப்புநாடுகள் இந்த நடவடிக்கைக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர கூட்டு நடவடிக்கை
IEA-வின் நிர்வாக இயக்குநர் Fatih Birol கூறுகையில், “எண்ணெய் சந்தையில் நாம் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் அளவில் முன்னெப்போதும் இல்லாதவை.
அதனால் IEA உறுப்புநாடுகள் இதுபோன்ற மிகப்பெரிய அவசர கூட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
IEA மேலும் தெரிவித்ததாவது, அவசர எண்ணெய் கையிருப்புகள் ஒவ்வொரு உறுப்புநாட்டின் தேசிய சூழ்நிலைக்கு ஏற்ப சரியான கால அட்டவணையின் படி சந்தைக்கு வெளியிடப்படும்.
600 மில்லியன் பேரல் எண்ணெய்
IEA இதற்கு முன்பு 1991, 2005, 2011 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஆகிய காலங்களில் ஒருங்கிணைந்த எண்ணெய் கையிருப்பு வெளியீட்டை அனுமதித்துள்ளது.

இது அந்த அமைப்பு மேற்கொள்ளும் ஆறாவது நடவடிக்கை ஆகும். மேலும், IEA உறுப்புநாடுகள் 1.2 பில்லியன் பேரல்களுக்கு மேற்பட்ட அவசர எண்ணெய் கையிருப்புகளை வைத்துள்ளன.
இதற்கு கூடுதலாக, அரசின் கட்டாய விதிகளின் கீழ் தொழில் துறையால் 600 மில்லியன் பேரல் எண்ணெய் கையிருப்புகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam