வெற்றிகரமாக நிறைவடைந்தது மோடியின் இலங்கை விஜயம்! ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Narendra Modi
By Rakesh Apr 06, 2025 01:55 PM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான அரச விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் அனுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்துக்கான உறுதிப்பாடு" என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் இரவு இலங்கை்கு அரச பயணம் மேற்கொண்டிருந்தார்.

வளமான எதிர்காலத்துக்கான உறுதிப்பாடு

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்த நான்காவது தடவை இதுவாகும்.

இந்த அரச விஜயத்தால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கிடையிலான பன்முக ஒத்துழைப்புகளும் பலப்படுத்திக்கொள்ளப்பட்டன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெற்றிகரமாக நிறைவடைந்தது மோடியின் இலங்கை விஜயம்! ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிப்பு | Modi Visit Sri Lanka Was Successfully Completed

அத்துடன், அயலவருக்கு முதலிடம் என்ற இந்திய வெளிவிவகாரக் கொள்கை மற்றும் மஹாசாகர் நோக்குக்கு அமைவாக, இராஜதந்திர விவகாரங்களில் இலங்கைக்கு சிறப்பிடம் உண்டு என்பதையும் இந்தியப் பிரதமரின் விஜயத்தால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயம் முக்கியமான பல்வேறு எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு உடன்பாடுகளை எட்டக்கூடியதாக அமைந்ததுடன், இந்த ஒத்துழைப்புகளின் வெற்றிகரமான பலன்களை இலங்கை மக்கள் விரைவில் அனுபவிக்க முடியும்.

தமிழர் விவகாரம்

மேலும், மக்களுக்கான நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் அரசின் பயணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

வெற்றிகரமாக நிறைவடைந்தது மோடியின் இலங்கை விஜயம்! ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிப்பு | Modi Visit Sri Lanka Was Successfully Completed

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இந்திய அரசின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்த விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினர், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து தமிழர் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US