ரஷ்ய அதிபர் தொடர்பில் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட பைடனின் கருத்து! வெள்ளை மாளிகை விளக்கம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொடர்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்த கருத்து தொடர்பில் வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
ஜோ பைடன் பேசுகையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் "அதிகாரத்தில் நீடிக்க முடியாது" என்று தெரிவித்தார்.
உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் உரையாற்றிய போது,ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் "அதிகாரத்தில் நீடிக்க முடியாது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புடின் குறித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பைடனின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அவர் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்றும் வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அளித்த விளக்கத்தில், “அதிபர் பைடனின் கருத்து என்னவென்றால், புடின் தனது அண்டை நாடுகளின் மீது அதிகாரத்தை செலுத்த அனுமதிக்க முடியாது.
ரஷ்யாவில் "ஆட்சி மாற்றத்தை" விரும்பவில்லை. ரஷ்யாவில் புடினின் அதிகாரம் குறித்தோ அல்லது ஆட்சி மாற்றம் பற்றியோ அவர் விவாதிக்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
