உக்ரைன் இராணுவ கட்டளை மையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா 31 ஆவது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு அஞ்சி உக்ரைனின் கார்கீவ் நகர மக்கள் பாதாள அறைகளில் பதுங்கியுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் இராணுவ கட்டளை மையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், இராணுவ கட்டளை மையம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
மத்திய உக்ரைனில் உள்ள வினிஸ்டியா நகரில் உள்ள இராணுவ கட்டளை மையத்தை குறிவைத்து ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலில் இராணுவ கட்டளை மையத்தின் கட்டிடம் பெரும் சேதமடைந்துள்ளது எனவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
