அரசியலுக்காக ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்த அமைச்சர்கள்! ஆளும் கட்சி வெளிப்படுத்திய காரணம்
ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை, அனைத்து பாரம்பரிய அரசியல் சலுகைகளையும் துறந்து, நாட்டிற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கே.வி. சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டமொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,
மக்களுக்கு முன்மாதிரியான ஆளும் கட்சி
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆளும் கட்சி மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், அதன்படி ஆடம்பரமான சலுகைகளை தானாக முன்வந்து ஒழித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களையும் பிரம்மாண்டமான மாளிகைகளையும் தாம் முற்றிலுமாகப் பயன்படுத்துவதை தவிர்த்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒரு அமைச்சர் சுமார் ஏழு வாகனங்களைக் கொண்டிருக்க சட்ட விதிகள் இருந்தாலும், தாம் உத்தியோகபூர்வ பணிகளுக்காக ஒரே ஒரு வாடகை காரை மட்டுமே பயன்படுத்துவதாகவும், அது பழுதடைந்தால் பயன்படுத்துவதற்காக மற்றொரு வாகனத்தைக் கூடுதல் வாகனமாக வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
மேலும், அமைச்சகத்திற்கு மாதத்திற்கு 2,100 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீடு இருந்தபோதிலும், நாடு முழுவதும் மேற்கொள்ளும் உத்தியோகப்பூர்வ பயணங்களுக்காக மாதத்திற்கு 900 லீட்டர் எரிபொருளை மட்டுமே செலவிடுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஆட்சியாளர்கள் இவ்வாறு தங்களின் சலுகைகளை குறைத்து ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கும்போது, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களும் அனைத்து குடிமக்களும் நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஆர்வத்துடன் பங்களிக்குமாறும் அமைச்சர் குறிபிபட்டுள்ளார்.
இதேவேளை, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆடம்பர வாழ்க்கையை வாழ தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பதுளையை விட்டு வெளியேறி கொழும்பிற்கு குடியேறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தீவிர அரசியல் களத்திலிருந்து விலகும் ராஜபக்சர்களின் வாரிசுகள்! ஒன்பது பிரிவுகளாக பிரிந்துள்ள ராஜபக்ச குடும்பம்
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri