நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்: கஜேந்திரகுமார் ஆவேசம்

Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician
By Thileepan Dec 06, 2023 10:16 PM GMT
Report

 நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஸபக்ச கடந்த 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (06.12) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

புலம்பெயர காத்திருப்போருக்கு பிரித்தானியா விதித்துள்ள கட்டுப்பாடுகள்

புலம்பெயர காத்திருப்போருக்கு பிரித்தானியா விதித்துள்ள கட்டுப்பாடுகள்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் வரலாறு

“கடந்த 4 ஆம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் நீதியமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றிய விடயங்கள் தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் அறிக்கையிட்டிருந்தார்.

அவரது பேச்சில் குறிப்பாக என்னை ஒரு இனவாதியாகவும், எனது தந்தையை ஒரு முற்போக்குவாதியாகவும், இந்த சபையின் முன்னாள் உறுப்பினராக இருந்த எனது பாட்டனாரை ஒரு இனவாதியாகவும் சித்தரித்திருந்தார்.

நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்: கஜேந்திரகுமார் ஆவேசம் | Minister Of Justice Should Resign

அதில் என்னுடைய பாட்டனார் கம்பளையில் ஆற்றிய உரையில் சிங்கள மக்களை அவமதித்தும், அவர்களைக் கீழ்த்தரமாகவும் கூறியதாகவும் கூறி அவரை ஒரு இனவாதியாக காட்டிக்கொள்வதற்காக தனது கருத்தை முன்வைத்திருந்தார்.

40 வருட அவருடைய அரசியல் வரலாற்றிலே ஒரே சம்பவத்தை மட்டுமே குறிப்பிட்டு அவரை ஒரு இனவாதியாக காட்ட நீதியமைச்சர் முயன்றிருக்கிறார்.

இனவாத கருத்து

எந்தளவு தூரத்துக்கு அவர் கூறிய கருத்து உண்மையாக இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. அதேபோன்று சிங்களவர்களுக்கு எதிரான இனவாதத்தை ஒரு பக்கம் காட்டிக்கொண்டு, இந்திய இலங்கை பிரஜா உரிமை சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது.

அதில் 690, 000 மலையக மக்களுடைய பிரஜாவுரிமையைப் பறிப்பதற்கு அமைச்சுப் பதவியைப்பெற்று ஆதரவளிக்கத் தயங்காதவராகவும் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தவராக தான் ஜி.ஜி.பொன்னம்பலம் இருந்தவர் என்றும் அவருடைய பேரானாக அவரைப் போலவே இனவாதத்தை கக்குகின்ற ஒருவராக நான் இருக்கின்றேன் என்றும் நீதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்: கஜேந்திரகுமார் ஆவேசம் | Minister Of Justice Should Resign

ஒரு நீதியமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஸ என்னுடைய பாட்டனார் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற நிலையில் - சட்டத்தை விளங்கிக் கொண்டும் சரியான தகவல்களோடு முன்வைக்க முடியாமல் தத்தளிக்கிறார்.

மலையக மக்களுடைய பிரஜா உரிமையை பறித்த சட்டம் இலங்கை பிரஜா உரிமைச்சட்டம் 1948ம் ஆண்டு 18 ஆம் இலக்க சட்டம். அந்த சட்டம் மலையக மக்களுடைய பிரஜா உரிமையை எப்படி பறித்ததென்றால் -இரண்டு சந்ததிகளுக்கு பின்னுக்கு சென்று அவர்கள் நிரந்தரமாக இந்தத் தீவிலே வாழ்ந்ததாக நிரூபிக்க வேண்டியதொரு நிபந்தனையை இட்டதால் - மலையக மக்களுக்கு அதனை உறுதிப்படுத்த முடியாமல் இருந்த காரணத்தினால் அவர்களது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது.

பிரஜா உரிமை சட்டம்

அந்த இலங்கை பிரஜா உரிமை சட்டம் 1948ஆம் ஆண்டு 18 வது சட்டத்தை தமிழ்க் காங்கிரஸ் முற்றாக எதிர்த்திருந்தது. ஜி.ஜி.பொன்னம்பலமும் அதை எதிர்த்திருந்தார்.

இதை நிரூபிப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய வெள்ளி மலரின் கட்டுரை ஒன்றின் ஊடாக நிரூபிக்க விரும்புகின்றேன்.

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு! நிராகரிக்கும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு! நிராகரிக்கும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு

அந்தக் கட்டுரையை ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பரம விரோதியாக அன்று அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இந்த சபையில் செயற்பட்டிருந்த திரு.அமிர்தலிங்கம் அவர்களே எழுதியிருந்தார்.

அந்த ஆவணத்தை இங்கே பதிவு செய்வதோடு, அதனை ஆவணப்படுத்துவதற்கும் இந்த சபைக்கு சமர்ப்பிக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

கனடாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த மாணவியின் இறுதிச் சடங்கு (Photos)

யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த மாணவியின் இறுதிச் சடங்கு (Photos)

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US