யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த மாணவியின் இறுதிச் சடங்கு (Photos)
புதிய இணைப்பு
யாழ்.அராலியில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த மாணவியின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெற்றுள்ளது.
இறுதிசடங்கையடுத்து தகனக் கிரியைகள் மினங்குப்பிட்டி இந்து மயானத்தில் நடைபெற்றது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்த பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்த நிலையில் அவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
வாலை அம்மன் வீதி, அராலி கிழக்கினைச் சேர்ந்த சிவகுமார் பானுப்பிரியா (வயது 17) என்ற மாணவியே தவறான முடிவெடுத்து நேற்றையதினம் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்த பெற்றோர் மாணவியை கண்டித்த நிலையில் அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த மாணவி நேற்று(06.12.2023) காலை 11 மணிக்கு அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடற்கூற்று பரிசோதனை
யாழ். அராலி கிழக்கினைச் சேர்ந்த சிவகுமார் பானுப்பிரியா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி மேற்கொண்ட நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழர் பகுதியில் தொடரும் இராணுவ மயமாக்கல் : அரசுக்கு எதிராக கடும் அழுத்தம் கொடுக்க பிரித்தானியா வலியுறுத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |