புலம்பெயர காத்திருப்போருக்கு பிரித்தானியா விதித்துள்ள கட்டுப்பாடுகள்
பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் சில கடுமையான நிபந்தனைகளை அறிமுகம் செய்துள்ளது.
இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ள சட்டதிட்டங்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி விதிக்கப்பட்டுள்ள முக்கிய ஐந்து நிபந்தனைகள் பின்வருமாறு
1. பிரித்தானிய பணியாளர் விசா பெறுவதற்கான ஊதிய வரம்பு உயர்வு
வெளிநாட்டவர் ஒருவர் பிரித்தானியாவில் பணி செய்ய, திறன்மிகுப் பணியாளர் விசா பெறவேண்டுமானால் அவரது ஊதியம் ஆண்டுக்கு 26,200 பவுண்டுகள் அல்லது ஒரு மணி நேரத்துக்கு 10.75 பவுண்டுகளாக இருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இந்த ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டு ஆண்டொன்றிற்கு 38,700 இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. குடும்ப விசாவிற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு அதிகரிப்பு
பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஒரு வெளிநாட்டவர், தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை தன்னுடன் பிரித்தானியாவுக்கு அழைத்து வர விரும்பும் பட்சத்தில், அவரது குறைந்தபட்ச வருமானம் தற்போது ஆண்டொன்றிற்கு 18,600 பவுண்டுகளிலிருந்து 38,700 பவுண்டுகளாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
3. குடும்பத்தினரை அழைத்து வர பராமரிப்புப் பணியாளர்களுக்குத் தடை
முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பணியைச் செய்யும் பராமரிப்புப் பணியாளர்கள், இனி தங்கள் கணவன் அல்லது மனைவி அல்லது குழந்தைகளையோ பிரித்தானியாவுக்கு அழைத்து வர முடியாது என குறிப்பிடப்படுகிறது.
4. பணியாளர்கள் பற்றாக்குறை தள்ளுபடி நீக்கம்
பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள வெற்றிடங்களை முதலாளிகள் எளிதாக நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி, அத்தகைய பணி செய்ய வருவோருக்கான விசாவினை பெற, 20 சதவிகித தள்ளுபடி வழங்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது நீக்கப்படவுள்ளது.
5. மருத்துவ உப கட்டணம் உயர்வு
மருத்துவமனைகளை பயன்படுத்துவதற்காக வருடாந்திர கட்டண விசா வைத்திருப்பவர்கள் செலுத்தும் மருத்துவ உப கட்டணம் 624 பவுண்டுகளிலிருந்து 1,035 பவுண்டுகளாக உயர உள்ளது.
6. பட்டதாரி விசா மீளாய்வு
ஒரு மாணவர் பிரித்தானியாவில் வெற்றிகரமாக படிப்பை முடித்த பிறகு குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் நாட்டில் தங்குவதற்கு ஒரு பட்டதாரி விசா அனுமதியளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அத்திட்டத்தை மீளாய்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
முதுகலை ஆராய்ச்சி படிப்பு படிப்பவர் தவிர்த்து,ஏனைய சர்வதேச மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியா அழைத்து வர முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் வரை வேலை விசாவிற்கு மாற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
