ஆளும் தரப்பு எம்.பியின் பொய்யை அம்பலப்படுத்திய அமைச்சர்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளியிட்ட பொய்யை அதே கட்சியின் அமைச்சர் குமார ஜயகொடி அம்பலப்படுத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் சில நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, சினொபெக் எரிபொருள் நிறுவனத்தின் முதலீட்டை இலங்கைக்குக் கொண்டுவந்தது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே என்று வாதாடியிருந்தார்.
அந்த வகையில் மிகப் பெரும் முதலீடு ஒன்றை தேசிய மக்கள் அரசாங்கம் இந்நாட்டுக்கு கொண்டு வருவதில் வெற்றி கண்டுள்ளதாக அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
முன்னைய ஆட்சியாளர்களின் நல்ல விடயங்கள்
எனினும், குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அதனை ஆட்சேபித்து, சினொபெக் ஒப்பந்தம் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது என்று வாதிட்ட போதும் லக்மாலி ஹேமச்சந்திர அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், அதே தொலைக்காட்சி அலைவரிசையின் இன்னொரு அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, சினொபெக் ஒப்பந்தம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலத்தில் அன்றைய அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் கொண்டு வரப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார்.
அத்துடன், முன்னைய ஆட்சியாளர்கள் செய்த நல்ல விடயங்களை ஒப்புக் கொள்வதில் தமக்கு ஏதும் நஷ்டம் அல்லது பாதிப்பு ஏற்படப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதனூடாக தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவின் கூற்று பொய் என்பதை அதே கட்சியின் அமைச்சர் குமார ஜயகொடி அம்பலப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்



