அநுரவின் உறுதிமொழியால் லக்மாலிக்கு ஏற்பட்ட சிக்கல்
தேசிய மக்கள் சக்தியையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தென்னிலங்கை தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் வாகன ஏலம் தொடர்பான உரையாடலின் போதே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த, தற்போதைய ஜனாதிபதி முன்வைத்த சில கருத்துக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
தேர்தல் பிரசாரம்
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் மதிப்புள்ள வாகனங்களை பயன்படுத்துவதாகவும், தான் ஜனாதிபதியானவுடன் அவற்றை ஏலம் விடுவதாகவும் கூறியதாக சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், இதை சவால் செய்த லக்மாலி ஹேமச்சந்திரா, ஜனாதிபதி அவ்வாறு கூறவில்லை என்றும், அவ்வாறு கூறியிருந்தால், அதை அவர் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொலவத்த, ஜனாதிபதியின் அறிக்கையை தனது கையடக்க தொலைபேசியில் பிரதியெடுத்து நிகழ்ச்சிக்கு முன்னால் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் லக்மாலி ஹேமச்சந்திரா, தனது சொந்த தகவலுக்காகஇது குறித்து விசாரித்ததாகவும், ஜனாதிபதி அப்படிச் சொன்னால் அது சரி என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
