தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை
ஐனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த உடன்படிக்கையானது தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு எனும் பெயரில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவரங்கில் இன்று (22) கைச்சாத்திடப்பட்டுள்ளது
இதனடிப்படையில் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் இணைந்து தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பாக தொடர்ந்து இயங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள்
இவ் உடன்படிக்கையில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு சிவில் அமைப்புக்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச் சபையின் சார்பில் அதன் முக்கியஸ்தர்களும் கையொப்பம் வைத்துள்ளதோடு 7 தமிழ்க் கட்சிகளும் 7 சிவில் சமூக பிரதிநிதிகளும் கையொப்பம் இட்டுள்ளனர்..
இதில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஐனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் அங்கம் பெற்றுள்ளன.
இந் நிகழ்வில் பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
