22ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணை குறித்து கல்வி அமைச்சரின் கருத்து: செய்திகளின் தொகுப்பு
22ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படும் என்பது பல்வேறு குழுக்களும் படிப்பறிவு இல்லாதவர்களும் வெளியிடும் கருத்து என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், ''அடுத்த அமர்விற்கான நிகழ்ச்சி நிரலை நேற்று தயாரித்தேன்.
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரலில் 22ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணை உள்ளடக்கப்படவில்லை. 22ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணை ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
இந்த அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படும் என்பது பல்வேறு குழுக்கள் மற்றும் படிப்பறிவு இல்லாதவர்களால் வெளியிடப்படும் கருத்து” என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பகல் நேர செய்திகளின் தொகுப்பு.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |