ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தொடர்பில் ஆணைக்குழு விசேட அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (26.07.2024) முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (24) அல்லது வியாழக்கிழமை (25) நடைபெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
கூட்டத்தின் பின்னர் தேர்தல் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்து இன்றுடன் (22) 05 நாட்கள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
இன்னும் 4 நாட்களில் எதிர்பாராத அளவு செல்வத்தை கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- உங்களுக்கும் லக் இருக்கா? Manithan