பிரித்தானியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை விவகாரம்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
பிரித்தானியாவின் கொன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமேஸ் (David Ames) கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
தமது தொகுதி மக்களுடனான வழக்கமான கலந்துரையாடலின் போது, 69 வயதான டேவிட் அமேஸ் இளைஞர் ஒருவரின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் 25 வயதான இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு காணப்படலாம் எனும் கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில்,கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பான விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
லண்டனில் வசிக்கும் 25 வயதான Ali Harbi Ali என்பவரே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும்,சோமாலியா வம்சாவளியை சேர்ந்த இவர் இஸ்லாமிய தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர் என்றும் கூறப்படுகின்றது.
மேலும்,சந்தேகநபர் சோமாலியா பிரதமரின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகர் (Harbi Ali Kullane)வின் மகன் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சர் டேவிட் அமெஸ் எம்.பியை கொலை செய்ய சந்தேகநபர் ஒரு வாரத்திற்கு மேலாக திட்டமிட்டு வந்ததும், லண்டனில் வசித்து வரும் இவர் தனியாளாக ரயில் மூலம் வருகை தந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
பிரித்தானியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலை! பயங்கரவாத செயல் என பொலிஸார் அறிவிப்பு
பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமேஸ் கத்திக்குத்துக்கு இலக்காகி பலி