யாழில் மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரிய பொலிஸார்: நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை செய்யக் கோரி மானிப்பாய் மற்றும் பலாலி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பு இன்றையதினம் (21.11.2023) மல்லாகம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மானிப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுஸ்டிப்பதை தடை செய்ய கோரியே பொலிஸார் விண்ணப்பம் செய்திருந்தனர்.
நினைவுகூர முடியும்
இதன்போது, நினைவு கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் நினைவுகூர முடியும் என தெரிவித்த நீதிமன்றம் பொலிஸாரின் தடை கோரிய விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.
இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி அச்சுவேலி மற்றும் தெல்லிப்பழை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 39 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
