அமெரிக்கா மீதான ஈரானின் ட்ரோன் தாக்குதல் - FBI விடுத்த எச்சரிக்கை : கவலை இல்லை என்கிறார் ட்ரம்ப்
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளை இலக்கு வைத்து ஈரான் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தக்கூடும் என ஃபெடரல் புலனாய்வுப் பணியகம் (FBI) எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனினும், அமெரிக்க மண்ணில் ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தக்கூடிய தாக்குதல்கள் குறித்து தான் கவலைப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பலத்த பாதுகாப்பில் கலிபோர்னியா
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அண்மையில் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டதையடுத்து, அதற்குப் பதிலடியாக ஈரான் பல்வேறு தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
இந்தச் சூழலில், கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத கப்பலில் இருந்து ஈரான் ஆளில்லா வானூர்திகளை ஏவி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கலிபோர்னியா காவல்துறைக்கு FBI கடந்த மாதம் இரகசிய எச்சரிக்கை விடுத்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தத் தாக்குதல் எப்போது நடக்கும் அல்லது எதனை இலக்கு வைக்கும் என்பது குறித்த மேலதிக தகவல்கள் ஏதுமில்லை என அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் குறித்து தான் கவலைப்படவில்லை என ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
இதற்கிடையில், கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசமின் (Gavin Newsom) அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய கிழக்கில் போர் தொடங்கியதில் இருந்தே கலிபோர்னியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மத்திய மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து அவசரகால சேவைகள் பிரிவு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri