மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்(Photos)
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று தமிழர் பகுதிகளில் ஆரம்பமாகவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நிகழ்வு
இந்நிலையில், மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
இதையொட்டி யாழ்ப்பாணம், நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று மாலை 6 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.
1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தாயக மண்ணின் விடியலுக்காக வித்தாகியவர்களில் கிடைக்கப் பெற முடிந்த 24 ஆயிரத்து 379 மாவீரர்களின் பெயர்களை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கிய நினைவாலயம் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மாவீரர் நிகழ்வு
மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-தீபன்
சுப்பர்மடம் மாவீரர்கள் பெற்றோர் உறவுகள் கௌரவிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடம் கிராமத்தில் உள்ள மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று காலை 9:30. மணியளவில் கிராம மக்கள் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் முதல் நிகழ்வாக மாவீரர்கள் திரு உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு மௌனவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து மாவீர்கள் பெற்றோர்கள் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
செய்தி- எரிமலை
வன்னி விளாங்குளம் மாவீரர் நிகழ்வு
வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வு தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கார்த்திகை மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்படுவது வழமை அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று (21) உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தபோது இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த கல்லறைகள் நினைவுக் கற்கள் மற்றும் வளாகம் முற்றாக இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த துயிலும் இல்லம் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருவதோடு இவ்வாண்டும் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
செய்தி-சதீஸ்
முள்ளியவளையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (21.11.2023) காலை 11.30 மணியளவில் தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் ஞனதாஸ் யூட்சன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர்களான க.விஜிந்தன், க.தவராசா, பிரதேச சபையின் உறுப்பினர் த.அமலன், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி-சதீஸ்
மட்டக்களப்பில் மாவீரர் துயிலுமில்லங்களைத் துப்பரவு செய்யும் பணிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறந்த முறையில் சிரமதானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லம், மற்றும் தரவை மாவீரர் துயிலுமில்லம், போன்ற துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஸ்ட்டிப்பதற்காக தற்போது நாம் பொதுமக்களின் பங்கேற்புடன் சிரமதானப்பணிகளை முன்னெடுத்து துயிலுமில்லைத்தை அலங்கரிக்கும் வேலத்திட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வட்டக்கச்சியில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு
மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்றது.
இராமநாதபுரம், வட்டக்கச்சி கல்மடுநகர் ஆகிய கிராமங்களில் உள்ள மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி-எரிமலை
மாவீரர் நினைவேந்தல் மண்டபம்
மாவீரர்களின் பெயர் பட்டியல் பொறிக்கப்பட்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று நெல்லியடி மாலிசந்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த மண்டபத்தில் மாவீரர் வார இறுதி நாளான நவம்பர் 27 வரை அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.
இதே வேளை உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திலும் இன்றிலிருந்து அஞ்சலி செலுத்தப்பட்டுவருகின்றனர்.
செய்தி-எரிமலை
கிளிநொச்சி பூநகரில் மாவீரர் நிகழ்வு
கிளி நொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட பொன்னாவெளி பிரதேசத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோரை கௌரவிக்கின்ற நிகழ்வு இன்று(21-11-2023) நடைபெற்றுள்ளது.
அந்த வகையிலே இன்று பகல் 10 மணிக்கு பூனகரி பொன்னாவெளி பிரதேசத்தை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
முன்னாள்
பிரதேச சபை உறுப்பினர் ஜெயச்சித்ரா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில்
மாவீரர்களின் பெற்றோர்கள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டு
நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
செய்தி-யது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
