நாமலை வழி நடத்தும் மர்ம சக்தி : ரணிலிடம் தெரிவித்த மகிந்த
கடந்த செவ்வாய்க்கிழமை வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.
ஆனால், சபைக்குள் செல்லாமல், எதிர்க்கட்சி அறை, ஆளும் கட்சி அறைகளுக்கு சென்று உறுப்பினர்களுடன் சுமுகமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம், சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் நம்பிக்கையுடன் உரையாடியமை சிறப்பான விடயமாக பார்க்கப்படுகிறது.
ரணில் - மகிந்த சந்திப்பு
ஜனாதிபதி ரணில் ஆளுங்கட்சியின் முன்னிலையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய வேளையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இருந்த குழுவினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நீங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறியதாகவும், ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் அவரை விமர்சித்து வருவதாகவும் மகிந்தவிடம் தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்டம்
யாரோ ஒருவரின் ஆலோசனையை பெற்று நாமல் இவ்வாறு செயற்படுவதாக மகிந்த, ரணிலிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தையும் பிரச்சினையின்றி நிறைவேற்ற முடியும் என்பது ஆளும் கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
