யாழில் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்யக் கோரிய பொலிஸார்: நீதிமன்றத்தால் மனு நிராகரிப்பு
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி பொலிஸாரால் தாக்கல் செய்த மனு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி யாழ். மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்ப்பட்டிருந்தது.

தேசியக் கொடிக்கு தடை விதிக்கவும்: மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் அனுமதி! மக்களிற்கு பகிரங்க அழைப்பு (Video)
மாவீரர் நாள் நினைவேந்தல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கோப்பாய் துயிலுமில்லம், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவு மண்டபம் என்பவற்றில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு தடை கோரியே மனு தாக்கல் செய்யப்ப்பட்டிருந்தது.
குறித்த மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை (27.11.23023) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.
இதன்போது மாவீரர் தினத்திற்கு தடை கோரிய பொலிஸின் மனுவை யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா நிராகரித்துள்ளார்.
"இறந்தவர்களை நினைவுகூருவதை தடை செய்ய முடியாது. ஆனால் தடை செய்யப்பட்ட அமைப்பை மற்றும்/அல்லது அவர்களை அடையாளப்படுத்தும் கொடி உள்ளிட்ட எதையும் பயன்படுத்த முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : கிழக்கில் வலம் வரும் போலி சுவரொட்டிகள் - சதி நடவடிக்கை அம்பலம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
