மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : கிழக்கில் வலம் வரும் போலி சுவரொட்டிகள் - சதி நடவடிக்கை அம்பலம்
வடக்கு - கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதிகளில், உரிமை கோரிய யுத்தத்தில் வீர மரணத்தை தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன.
இந்தநிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளை குழப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
போலியான சுவரொட்டிகள்
குறித்த சுவரொட்டியில், பல தடைகள் வருகின்ற காரணத்தினால் திட்டமிட்டபடி மாவீரர் நினைவு தின நினைவஞ்சலிகள் இடம்பெறாது என்றும் அவரவர் வீட்டில் இருந்து அஞ்சலி செலுத்துமாறு குறித்த குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகளை முன்னிட்டு பலருக்கு பொலிஸாரால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு சுவரொட்டிகள் மூலம் அஞ்சலி நிகழ்வினை குழப்பும் செயற்பாட்டில் சிலர் ஈடுபட்டு ருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தச் சுவரொட்டிகள் போலியானது எனவும், மாவீரர் தினத்தை குழப்பும் நோக்கில் விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கை என்றும், இந்த பொய் பிரச்சாரங்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மாவீரர் தின நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 22 மணி நேரம் முன்

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
