யாழில் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்யக்கோரி வழக்குத் தாக்கல்
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் இன்றைய தினம் (25.11.2023) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணை
குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை (27.11.2023) காலை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கோப்பாய் துயிலுமில்லம், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவு மண்டபம் என்பவற்றில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள அதற்கு தடை கோரியே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 56 நிமிடங்கள் முன்

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
