மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது குறித்து சம்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு

Sri Lankan Tamils Trincomalee Gajendrakumar Ponnambalam
By Parthiban Nov 24, 2023 09:02 PM GMT
Report

தமிழ் மாவீரர் தினத்தை இலக்காகக் கொண்டு கிழக்கு மாகாணத்தின் சம்பூர் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், போரில் உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவேந்தல் தொடர்பில் நீதிமன்றம் இரண்டு வார காலத்திற்கு ஆலோசனை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் மக்களின் இரு பிரதிநிதிகள் உட்பட 17 பேரின் பெயர்களை குறிப்பிட்டு, மாவீரர் நினைவேந்தலின் போது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என வலியுறுத்தி மூதூர் நீதவான் நீதிமன்றம் நவம்பர் 23ஆம் திகதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இஸ்ரேலிய வீரர்களின் தலைக்கவசங்கள் மாத்திரம் ஏன் இப்படி இருக்கின்றன..! (Video)

இஸ்ரேலிய வீரர்களின் தலைக்கவசங்கள் மாத்திரம் ஏன் இப்படி இருக்கின்றன..! (Video)


சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 (1) விதிகளின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மூதூர் நீதவான் எச்.எம்.தஸ்னீம் பௌஸான் பிறப்பித்த உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது குறித்து சம்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு | Sampur Court Order Regarding Maveerar Day

பொது வாழ்க்கைக்கு ஆபத்து

“இதன்படி சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சம்பூர் கிழக்கு ஆலங்குளத்தில் புலி உறுப்பினர்கள் புதைக்கப்பட்டிருக்கும் மயானத்திலோ அல்லது பொதுமக்கள் சட்டரீதியாக பயன்படுத்தக் கூடிய அல்லது எந்தவொரு மயானத்திலோ விடுதலைப் புலிகளின் இறந்த உறுப்பினர்களை நினைவுகூரும் நோக்கத்திற்காக மகாவீரர் நினைவேந்தல் தொடரில் பொலிஸ் அதிகார வரம்பிற்குள், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106, பின்வரும் நபர்கள் மற்றும் பிறருக்கு பொது சுகாதாரம் மற்றும் பொது வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

உடன்படிக்கையின்படி போர் நிறுத்தம் : காசாவுக்கு கிடைக்கவுள்ள நிவாரண உதவிகள்

உடன்படிக்கையின்படி போர் நிறுத்தம் : காசாவுக்கு கிடைக்கவுள்ள நிவாரண உதவிகள்


(1) விதியின் அடிப்படையில் நான் பரிந்துரைக்கிறேன்." தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 17 பேரின் பெயர்களை உள்ளடக்கி நவம்பர் 23ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எதிர்வரும் 14ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

தமிழ் மாவீரர் தினம் நவம்பர் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய மேற்சொன்ன நடவடிக்கைகளில் பங்கேற்கும் அனைத்து நபர்களுக்கும் இந்த உத்தரவு செல்லுபடியாகும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


Gallery
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US