இலங்கையில் வாகன இலக்கத்தகட்டில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வாகனப்பதிவு இலக்கங்களுக்கு பதிலாக, தனிநபர்களின் பெயர்கள் அல்லது வணிக நிறுவனங்களின் பெயர்களை உள்ளடக்கிய விசேட இலக்கத்தகடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான மதிப்பீடு
இந்த யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டால், வாகன உரிமையாளர்கள் தமது சொந்தப் பெயர் அல்லது வணிக நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட விசேட இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அரசாங்கத்துக்கு மேலதிக வருமானத்தை ஈட்டும் நோக்கில் விசேட வாகனப் பதிவு இலக்கங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு அதிக தெரிவுகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்ப, சட்ட மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.