ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவாராம்! பத்தரமுல்ல சீலரத்தன தேரர் நம்பிக்கை
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுப்பார் எனத் தாம் உறுதியாக நம்புகின்றேன் என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்தார்.
ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தில் நேற்று கடிதம் ஒன்றை கையளித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.
பொதுமன்னிப்பு நிச்சயமாகக் கிடைக்கும்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனுக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் அத்தண்டனையை இரத்துச் செய்து நிவாரணம் அளித்துள்ளது.

அதேபோன்று, அரசமைப்பின் மூலம் தமக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும்.
அந்தப் பொதுமன்னிப்பு நிச்சயமாகக் கிடைக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்" என்று தேரர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் ஆன்மா சாந்தியடையவே மகிந்த பழிவாங்கப்படுகின்றார்! ராஜபக்ச தரப்பு அதிரடிக் குற்றச்சாட்டு
நான் அரசாங்கத்தையே விமர்சித்தேன்! சிறுபான்மையினரை விமர்சிக்கவில்லை - விளக்கம் கூறும் லக்ஸ்மன் கிரியெல்ல