வரலாற்றில் முதன்முறையாக சக்திவாய்ந்த பெண் சபாநாயகர்! திரைமறைவில் இரகசிய திட்டம்
வரலாற்றில் முதன்முறையாக சக்திவாய்ந்த பெண் அரசியல்வாதியொருவர் சபாநாயகர் ஆக வேண்டும் என்ற கனவில் செயற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபலமான நாடாளுமன்ற உறுப்பினரான அவர், சிறந்த பேச்சுத்திறன் உடைய ஆளுமை மிக்க அரசியல்வாதி என்றும் கூறப்படுகின்றது.
தற்போதைய சபாநாயகரை போலவே, எதிர்காலத்தில் அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒருவரை அந்த நாற்காலிக்கு கொண்டுவர முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்க பக்கத்திலேயே இருந்து, எதிர்க்கட்சிகளை அமைதியாக்க முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 50 விடயங்களை உள்ளடக்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு, ஊழல் எதிர்ப்புச் சட்டம், அரச சொத்துச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் ஆகியவற்றை வேண்டுமென்றே மீறிச் செயற்பட்டதாக அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன விரைவில் தனது பதவியிலிருந்து விலகக்கூடும் என அரசியல் வட்டாரங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
you may like this video