விகாரமகா தேவி பூங்காவில் தஞ்சமடைந்த தேரர்களின் கூடாரங்கள் : நள்ளிரவில் திடீரென வந்த பொலிஸாரால் அகற்றம்
ஞானசார தேரருக்கு ஆதரவான பிக்குமாரின் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னிட்டு விகாரமகா தேவி பூங்காவில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை (16) நள்ளிரவு தாண்டிய நிலையில் விகாரமகா தேவி பூங்காவுக்கு திடீரென வருகை தந்த பொலிசார், கொட்டும் மழைக்கு மத்தியில் சட்டவிரோத கூடாரங்களை அகற்றும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
தற்காலிக கூடாரங்கள்
சிறைவாசம் அனுபவிக்கும் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இன்று மாலை தொடக்கம் விகாரமகா தேவி பூங்காவினுள் பிக்குமார்கள் மற்றும் பௌத்த மத பக்தர்கள் சிலரும் சத்தியாக்கிரக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது பிக்குமார் ஓய்வெடுப்பதற்கும் உறங்குவதற்கும் தற்காலிக கூடாரங்கள் பூங்காவினுள் அமைக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் ஓரிரண்டு கூடாரங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவு நேரத்தை அண்மித்த நிலையில் விகாரமகாதேவி பூங்காவின் பெரும்பாலான இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பொலிசார் தலையிட்டு குறித்த கூடாரங்களை அகற்றியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் ஆன்மா சாந்தியடையவே மகிந்த பழிவாங்கப்படுகின்றார்! ராஜபக்ச தரப்பு அதிரடிக் குற்றச்சாட்டு
நான் அரசாங்கத்தையே விமர்சித்தேன்! சிறுபான்மையினரை விமர்சிக்கவில்லை - விளக்கம் கூறும் லக்ஸ்மன் கிரியெல்ல