மட்டக்களப்பு - வாகரையில் மாவீரர் துயிலுமில்லம் தகர்ப்பு (Video)
வாகரை - கண்டலடியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் அடையாளம் தெரியாத குழுவினரால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு (24.11.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
மாவீரர் கல்லறைக் கற்கள்
மாவீரர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு - வாகரை துயிலுமில்லத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் பிரதேச இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு மிக எழுச்சி பூர்வமாக துயிலுமில்லம் தயார்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலிகள் உடைக்கப்பட்டு கொடிகள் அனைத்தும் கழற்றப்பட்டு, மாவீரர் கல்லறைக் கற்கள் தகர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விஷமத்தனமான செயல்களுக்கு தாங்கள் பயப்பட போவதில்லை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்லறைகள் இடிக்கப்பட்டதை கண்டதும் இன்று (25.11.2023) பெருமளவான வாகரை மக்கள் ஒன்று சேர்ந்து துயிலும் இல்லத்தை பாதுகாத்து துப்புரவு பணியிலும் ஈடுபட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எத்தடை வந்தாலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஈகைச்சுடர் ஏத்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும். அனைத்து மக்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
