வடக்கு - கிழக்கின் பல பகுதிகளில் மாவீரர்களுக்கு அஞ்சலி
தமிழ் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு தென்மராட்சிப் பகுதி முழுவதும் சிவப்பு – மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள், உள்ளக வீதிகள், கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் எனப் பல இடங்களிலும் சிவப்பு – மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
தமிழ் தேசிய மாவீரர் நாளைச் சிறப்பிக்கும் முகமாகவும், தமது இனத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் உணர்வின் வெளிப்பாடாகவும் பொதுமக்கள் இவ்வாறு சிவப்பு – மஞ்சள் கொடிகளைக் கட்டி தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

செய்தி - லின்டன்
முதலாம் இணைப்பு
யாழ். பருத்தித்துறை பிரதேசசபையின் மாதாந்த அமர்வில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முதல் நிகழ்வாக மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வு
இதன்போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஆகியோரும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து சென்ற கூட்ட அறிக்கை ஆராயப்பட்டு திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட்தும், சபைக்கான நிதி கொடுக்கல் அனுமதிகள், நிதிக்குழு கூட்ட அறிக்கைகள் என்பன ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 17 மணி நேரம் முன்
போருக்காக அழைக்கலாம்... தயாராக இருக்க 100,000 பிரித்தானிய ரிசர்வ் படையினருக்கு அறிவுறுத்தல் News Lankasri