மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள மாத்தறை சிறைச்சாலை நடவடிக்கைகள்
மாத்தறை சிறைச்சாலையின் நடவடிக்கைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் 17 பேர் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போதைய நிலவரம் தொடர்பில் கூறும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சுகாதார நடவடிக்கைகள்
மேலும் தெரிவிக்கையில், தற்போது கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 17 பேரில் 14 பேர் சாதாரண விடுதிகளிலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எனினும் கடந்த 48 மணித்தியாலங்களில் மூளைக்காய்ச்சலினால் எந்தவொரு நோயாளியும் பாதிக்கப்படவில்லை. சிறைச்சாலையின் சுகாதாரத்துறை மற்றும் பிரதேச சுகாதாரப்பிரிவு இணைந்து சிறைக்கைதிகள் மற்றும் நோய் நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றனர் என காமினி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |