ட்ரம்பால் விதிக்கப்பட்ட மற்றுமொரு அதிரடித் தடை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் பயணத் தடையை விரிவுபடுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியா மற்றும் பாலஸ்தீன நாடுகளில் வழங்கப்பட்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்கள் உட்பட, நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட குடிமக்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் ஆறு நாடுகளைச் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிதாக சேர்க்கப்பட்ட நாடுகள்
செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி பிரகடனத்தின் படி, புதிதாக சேர்க்கப்பட்ட நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவது முழுமையாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 15 நாடுகளின் குடிமக்கள் சில விசா வரம்புகள் உட்பட பகுதி கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

முழு பயணத் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகள்:
• சிரியா
• ஆப்கானிஸ்தான்
• மியன்மார்
• சாட்
• கொங்கோ குடியரசு
• பாலஸ்தீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் பகுதி பயண மற்றும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட 15 நாடுகளின் குடிமக்களுக்கு இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்:
• நைஜீரியா
• அங்கோலா
• சாம்பியா
• கேமரூன்
• எத்தியோப்பியா
• கானா
• ஐவரி கோஸ்ட்
• செனகல்
• தன்சானியா
• உகாண்டா
• சிம்பாப்வே
• எரித்திரியா
• சூடான்
• சியராலியோன்
• காம்பியா போன்ற நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டினர் கடுமையான பாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்யவதற்கு எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய விசா விண்ணப்பங்கள்
இந்தக் கட்டுப்பாடுகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டபூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள், விசா வைத்திருப்பவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் வேறு சில பிரிவுகளுக்கும் இது பொருந்தும் என்று நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,
இருப்பினும் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் புதிய விசா விண்ணப்பங்கள் கடுமையான ஆய்வு அல்லது மறுப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam