ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
ஆப்கானிஸ்தானின் மூன்று வீரர்களுக்கு ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவது கேள்விக்குறி ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீரர்கள் ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் ஆப்கான் கிரிக்கெட் சபை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தடையில்லா சான்றிதழ்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான்,ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோரின் 2024 மத்திய ஒப்பந்தங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
அத்துடன் இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டில் நடக்கும் ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாட தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற இயலாது என்றும் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மேலும் அவர்கள் ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
பிபிஎல் 2023 மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக தற்போது விளையாடி வரும் முஜீப் உர் ரஹ்மானுக்கும், அபுதாபி டி10 போட்டியில் விளையாடி வரும் ஃபசல்ஹாக் ஃபரூக்கியும், வெளிநாட்டு தொடர்கள் விளையாட இருந்த நிலையில் நவீன் உல் ஹக் முரீத்க்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலயில் ஐபிஎல் 2024 தொடரில் அந்த மூன்று வீரர்களும் விளையாடுவது கேள்விக்குறி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.