கொழும்பு நகரில் அபாய நிலையில் நூற்றுக்கணக்கான மரங்கள்
கொழும்பு நகரில் ஏறத்தாழ 700 மரங்கள் அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபையின் அறிக்கையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிய மரங்களை நாட்ட உள்ளதாக மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகர அபிவிருத்தி
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 200 மரங்கள் முழுமையாக அகற்றப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 வருடங்களுக்கு போதுமான மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் அறிக்கையின் படி, கொழும்பு நகரில் ஏறத்தாழ 700 மரங்கள் அபாய நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
