பத்மே வழங்கிய தகவல் : மீட்கப்பட்ட பொருட்கள்
பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மேவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் துப்பாக்கி மட்டும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெளிநாடு ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பத்மேவிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
திணைகள அதிகாரிகள் விசாரணை
பத்மேவிற்கு சொந்தமான ஆயுதம் உள்ளிட்ட சில பொருட்கள் தற்பொழுது வெளிநாடு ஒன்றில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவரினால் இலங்கையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் வெளிநாடு ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 267 ரீ56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்டன மீட்கப்பட்டுள்ளன.
எண்டேரமுல்லவிலிருந்து கொழும்பு கண்டி வீதி ஊடான குறுக்குப் பாதை ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டிடம் ஒன்றில் இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைகள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam