வெலிகம தனியார் பெண்கள் கல்லூரியில் பாரிய தீவிபத்து
வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் பெண்கள் அரபிக் கல்லூரி ஒன்றில் இரண்டாவது தடவையாகவும் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த அரபிக் கல்லூரியின் பெண்கள் விடுதியின் நான்கு மாடிக் கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இன்று(29.04.2024) மாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு வண்டிகள்
கட்டிடம் முழுவதும் தீ பரவிக் கொண்டிருந்த நிலையில் அதன் உள்ளே சுமார் 150 மாணவிகள் சிக்கிக் கொண்டிருந்தனர். எனினும் பிரதேசவாசிகள் சமயோசிதமாக செயற்பட்டு சகல மாணவிகளையும், ஒருவருக்கும் சிறு காயம் கூட ஏற்படாத வகையில் கட்டிடத்துக்கு வெளியில் கொண்டு வந்து காப்பாற்றியுள்ளனர்.

அத்துடன் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அணைக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.
அதன் பின்னர் மாத்தறை நகரசபையின் தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து தீயை அணைத்துள்ளன. தீவிபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பிரதேசத்தில் மின் துண்டிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் மின் ஒழுக்கினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் கடந்த மார்ச் மாதம் 02ம் திகதியும் இதே கல்லூரியின் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, பிரதேச வாசிகள் மற்றும் நகர சபை தீயணைப்பு வண்டிகளின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan