வீர வசனங்களை பேசாமல் தீர்வுகளை வழங்குங்கள்: பிள்ளையான் - சாணக்கியன் இடையே வாக்குவாதம்
வாகரை பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள இல்மனைட் அகழ்வு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன்(R. Shanakiyan),சிவநேசதுரை சந்திரகாந்தன்(Pillayan ) இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் வாகரை பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள இல்மனைட் அகழ்வு தொடர்பில் இரா. சாணக்கியன் கருத்துக்களை முன்வைக்கும்போதே இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
வாகரை பகுதியில் இல்மனைட் அகழ்வு மற்றும் இறால் பண்ணை திட்டங்களுக்கு அனுமதி வழங்கவேண்டாம் என கோரி வாகரை பிரதேச மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இதன்போது இவ்வாறான திட்டங்கள் பொருத்தமற்றவை என ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமானால் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இதன் பிரகாரம் இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட இரா. சாணக்கியன் மக்களுக்கு ஏற்புடைய வகையில் அமையாத எந்த ஒரு திட்டத்திற்கும் தாம் ஆதரவு வழங்க போவதில்லை என உறுதியளித்துள்ளார்.
மேலும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும், பொது இடங்களிலும் வீர வசனங்களை பேசாமல் உரிய தீர்வுகளை வழங்குவதே சிறந்த விடயமாக இருக்கும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சாணக்கியன்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 40 நிமிடங்கள் முன்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
