பிள்ளையானின் நெருங்கிய சகா கஜன் மாமாவின் உடல் எரிக்கப்பட்டதில் வலுக்கும் சந்தேகம்

Easter Attack Sri Lanka
By Dharu Apr 29, 2024 04:30 PM GMT
Report

ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவரின் உடல் எரிக்கப்பட்டதில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என அரசாங்கம் அஞ்சுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம்.

ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும் விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.

இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம்.

பிள்ளையானின் நெருங்கிய சகா கஜன் மாமாவின் உடல் எரிக்கப்பட்டதில் வலுக்கும் சந்தேகம் | Easter Sunday Attack Incident

காத்தான்குடியில் பாடசாலை ஒன்றில் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக ஒரு நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது.

அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004 இல் 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது.

2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004 இல் 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார்.

பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு

இமானிய நெஞ்சங்கள் அமைப்பு

அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004 இல் 'இமானிய நெஞ்சங்கள்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.

இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது.

பிள்ளையானின் நெருங்கிய சகா கஜன் மாமாவின் உடல் எரிக்கப்பட்டதில் வலுக்கும் சந்தேகம் | Easter Sunday Attack Incident

பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்.

இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார்.

மேலும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர்.

கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005 ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020 ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார்.

இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை.

இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர்.

இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை உட்படுத்தி கொலை செய்கின்றனர்.

ஈரான் ஜனாதிபதியின் விமானத்தால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்

ஈரான் ஜனாதிபதியின் விமானத்தால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்

கடத்தப்பட்டு கொலை

அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன், தப்பிராஜா வசந்தராஜா, கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் 'கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த' நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

பிள்ளையானின் நெருங்கிய சகா கஜன் மாமாவின் உடல் எரிக்கப்பட்டதில் வலுக்கும் சந்தேகம் | Easter Sunday Attack Incident

இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது.

அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த நாடாளுமன்றத்தினுள்ளும் உள்ளனர்.

இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார்.

30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13 ஆம் திகதி கண்கள், வாய், கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது.

ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார்.

அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர்.

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

அசாத் மௌலானா

அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார்.

பிள்ளையானின் நெருங்கிய சகா கஜன் மாமாவின் உடல் எரிக்கப்பட்டதில் வலுக்கும் சந்தேகம் | Easter Sunday Attack Incident

சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார்.

இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது.

அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை.

ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார்.

இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர்.

இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம்.

டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கம்

டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர்.

அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர்.

பிள்ளையானின் நெருங்கிய சகா கஜன் மாமாவின் உடல் எரிக்கப்பட்டதில் வலுக்கும் சந்தேகம் | Easter Sunday Attack Incident

இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும்.

வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார்.

லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபயமகிந்த ராசபக்சவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு மகிந்த ராசபக்ச ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது.

பிள்ளையான் வாயை திறந்தால்

அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008 இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.

அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர்.

பிள்ளையானின் நெருங்கிய சகா கஜன் மாமாவின் உடல் எரிக்கப்பட்டதில் வலுக்கும் சந்தேகம் | Easter Sunday Attack Incident

இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும்.

இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர்.

அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார்.

அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்து விட்டனர். 2019 இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம்.

அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்து விட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008 இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன்.

அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர்.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை

ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார்.

பிள்ளையானின் நெருங்கிய சகா கஜன் மாமாவின் உடல் எரிக்கப்பட்டதில் வலுக்கும் சந்தேகம் | Easter Sunday Attack Incident

மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாதிபதியிடம் கோருவது இந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும்.

2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம்.

அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும்.

அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள் என தெரிவித்தார்.  

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Ajax, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், புத்தளம், Frederikssund, Denmark, Gormley, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, வவுனியா, Milton Keynes, United Kingdom

17 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, முனைத்தீவு

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, London, United Kingdom

25 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கனடா, Canada

21 Nov, 2017
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், சுவிஸ், Switzerland

21 Nov, 2007
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, வவுனியா கூமாங்குளம்

26 Oct, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Harrow, United Kingdom

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, Kingsbury, United Kingdom

18 Nov, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US