கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான சிறுவர்களிடையே போசாக்கு குறைபாடு
கிளிநொச்சி (Kilinochchi) - கண்டாவளை பிரதேசத்தில் ஐந்து வயதிற்கும் குறைந்த அதிகளவான சிறுவர்களிடையே போசாக்கு குறைபாடு காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட பகுதியில் போசாக்கு குறைபாடான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதாவது, இந்த பிரதேசத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கள விஜயத்தின் மூலம் 160இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் போசாக்கு குறைபாடுகளுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கண்டறியப்பட்ட காரணங்கள்
இந்நிலையில், குறித்த பிரதேசங்களில் வாழும் குடும்பங்களில் காணப்படுகின்ற வறுமை மற்றும் தொழில் வாய்ப்பின்மை என்பன போசாக்கு குறைபாடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப் பிரதேசத்தில் 2024ஆம் ஆண்டில் ஆறு வரையான இள வயது கர்ப்பங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |